சீன இறக்குமதி கார்களுக்கு நூறு சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்ததற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரீஸில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய அவர், இதுபோன்ற வரியை தானும், டெஸ்லா நிறுவனமும் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
சந்தையில் எந்தவொரு தடையுமில்லை என்றால், சக போட்டி நிறுவனங்களே, சீன கார் தயாரிப்பு நிறுவனங்களை அழித்துவிடும் என எலான் மஸ்க் ஏற்கனவே கூறியதை நினைவுகூர்ந்தார்.