காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக சிஸ்டம் இருந்ததாக ராகுல் காந்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எனப் பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டியின் ஆட்சிக் காலத்தில், தனது தந்தையின் ஆட்சி காலத்தில் மற்றும் மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ராகுல் காந்தி அவர்கள்.
அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது! எனக் குறிப்பிட்டுள்ளார்.