திருப்பூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
உகாயனூர் பகுதியை சேர்ந்த தானபாண்டியனின் மனைவி சுடர்கொடி இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்.
இதனையடுத்து சுடர்கொடியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில் கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.