திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் கோயில் யானைக்கு பக்தர்கள் பிறந்தாள் கொண்டாடினர்.
புகழ்பெற்ற தலமான இக்கோயிலுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அகிலா என்ற யானை கொண்டு வரப்பட்டது. தினம்தோறும் அகிலா யானை மூலம் சுவாமிக்கு அபிஷேக நீர் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அகிலா யானைக்கு 22 -ம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதில் பாகன்கள், அர்ச்சகர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், யானை அகிலாவுக்கு பழங்கள், காய்கறிகள், கொழுக்கட்டை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.