மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் திட்டம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையில் வசித்து வரும் குடும்பங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலையூர் என்ற இடத்தில் குடிநீர் திட்டமானது செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 மாதமாக பவானி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் இந்த குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 3 மாதங்களுக்கு பிறகு இந்த திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.