கோடை விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கவுள்ளதால் புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ளது.
இதனைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள 197 பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்த பின் சீருடை, காலணி, புத்தகப்பை ஆகியவை அனுப்பும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.