தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேக்கரை பகுதியில், ஜீப் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார்.
மேக்கரை அடுத்த கரிக்குளம் பகுதியில் உள்ள இயற்கை நீர்வீழ்ச்சிக்கு ஜீப்பில் சிலர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த ஜிப் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், ரெஜிஷ் என்ற நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.