மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் ஏஸ் லியாம் நானா சாம், அட்டகாசமாக ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.
6 மாதத்தில் அவனது தாயார் விளையாட்டாக கேன் வாஷ் பேப்பரை தரையில் ஊற்றி, அதில் பெயிண்டை தெளித்தபோது அதை வைத்து ஓவியம் தீட்டம் தொடங்கிய அந்தச் சிறுவன், அதன்பின்னர் இயற்கைச் சூழலை எழில்மிகு கோணத்தில் ஓவியமாக தீட்டினான்.
அண்மையில் நடத்தப்பட்ட கண்காட்சியில் சிறுவனின் படைப்புகள் அதிகளவில் விற்பனையாகின. இதனால் உலகின் மிக இளவயது ஓவியர் என்ற முறையில் ஏஸ் லியாம் நானா சாம் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.