ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் குவாலிபையர்-2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் குவாலிபையர்-2 ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
இதையடுத்து 175 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே பெற்றது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.