திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே விபத்துக்குள்ளான இரு கார்களில் இருந்து மூட்டை மூட்டையாக சுமார் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பெருமாநல்லூர் அருகே வளசப்பாளையம் நெடுஞ்சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்த கர்நாடகா மற்றும் டெல்லி பதிவெண் கொண்ட இரு கார்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, விபத்தில் சிக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.
இதனையடுத்து கார்களில் நடத்தப்பட்ட சோதனையில், மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 26 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். மேலும் கார்கள் மோதிய விபத்தில் அரசு பேருந்து ஒன்றும் சேதமடைந்தது.