நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்வளத்துறையினர் ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு விசைப்படகு மீனவர்களுக்கு வரியில்லா டீசல் வழங்கி வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள், பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.