கள்ளக்குறிச்சியில் அரசு வேலை வாங்கிதருவதாக 33 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவருக்கு, ரவி மற்றும் நடராஜன் ஆகியோர் நண்பர்களாக அறிமுகமாகினர்.
இந்நிலையில் விநாயகமூர்த்தி மத்திய அரசின் வேலை வாங்கி தருவதாகக் கூறியதால் 35 நபர்களிடமிருந்து பணத்தை பெற்ற ரவி மற்றும் நடராஜன், மொத்தமாக 33 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை விநாயகமூர்த்தியிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியதால் ரவி மற்றும் நடராஜன் அளித்த புகாரின் பேரில் விநாயகமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.