கிழக்கு டெல்லி பாஜக எம்பியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் டெல்லியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு வளர்ச்சிக்காக உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமெனவும் கவுதம் கம்பீர் கேட்டுக் கொண்டார்.