ஓசூர் அருகே வழக்கறிஞர் அலுவலகத்தில் சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.
இந்த காட்சி அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் அலுவலகத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாம்புபிடி வீரர் சீனிவாசன் பாம்பை லாவகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டார்.