கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பரளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் சேதமடைந்தது.
மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அருகே 5 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக பாலம் கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் கனமழை காரணமாக பரளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலத்துக்காக போடப்பட்ட கல், மண் ஆகியவை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அந்த வழியாக செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.