விழுப்புரம் மாவட்டம், எஸ்.மேட்டுப்பாளையத்தில் உள்ள கனகதண்டி மகா மாரியம்மன் ஆலயத்தில் 8-ம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சித்திரை விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்களும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது.
அந்த வகையில் 8-ம் நாள் திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடத்தப்பட்டது.
இதையடுத்து ஆட்டுக்கிடாவை உறங்க வைத்து பலியிடும் நிகழ்ச்சியைக் காண சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.