ஈரோட்டில் உள்ள மேட்டூர் சாலையில் தடையை மீறி பயணித்த பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மேட்டூர் செல்லும் சாலையில் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்வதற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.
இந்தத் தடை அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி பேருந்துகள் பயணிப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.
எனவே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போக்குவரத்துத் துறை போலீசார் அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்து என 17 வாகனங்களுக்கு அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.