ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியத்தை மீட்டுவிட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் எல்லைப் புற பிராந்தியமும், அந்நாட்டின் 2ஆவது மிகப்பெரிய நகரமுமான கார்கீவை கடந்த மாதம் ரஷ்யா ஆக்கிரமித்தது.
இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் தீரத்துடன் போராடி, அந்தப் பிராந்தியத்தை மீட்டுவிட்டதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முன்னதாக கார்கீவில் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.