வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனாளர்களின் தரவுகளை விளம்பர நிறுவனத்துக்கு விற்பனை செய்வதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பீதியைக் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை மேற்கோள்காட்டி, இந்தத் தகவலை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகும் வாட்ஸ்ஆப் பாதுகாப்பானதாக இருப்பதாக சிலர் நம்புவதாகவும் அந்தப் பதிவில் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்கின் இந்தக் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ்ஆப்பை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.