தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வன்னியடி கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் விழா இந்தாண்டும் சிறப்பாக தொடங்கியது.
இதில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் காவிரி தென்கரையிலிருந்து அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்த பக்தர்கள் தீக்குண்டம் எதிரே எழுந்தருள செய்தனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.