மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளின் சகோதர தரிசனம் உற்சவம் நடைபெற்றது.
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில் ஸ்ரீ ஞானாம்பிகை உடன் சுவாமி, உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அப்போது சுவாமிகளுக்கு தீபாரதணை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.