தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் நடைபெற்ற அகில இந்திய ஹாக்கி போட்டிக்கான லீக் ஆட்டம் 4 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் கே.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி தொடங்கியது.
16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் இன்கம் டேக்ஸ் சென்னை அணி வெற்றிப் பெற்றது.
இதைத்தொடர்ந்து புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி, மும்பை யூனியன் பேங்க் அணி அடுத்தடுத்து வெற்றிப் பெற்றன.