விலையில்லா இலவச வேட்டி சேலை உற்பத்தியை, ஜூன் முதல் வாரத்தில் தொடங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாத காலமாக, ஜவுளி துறையில், நூல் விலை ஏற்றம் காரணமாக, ஏராளமான விசைத்தறிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இதனால்,ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே, விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தியை துவங்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.