கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடிய விஷ ஜந்துக்கள் சுற்றித்திரிவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
விருத்தாச்சலத்தில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிளைச் சிறைச்சாலை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், உள்ளிட்ட அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வருவது வழக்கம்.
இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகம் பராமரிப்பு இன்றி, மண் மேடுகளும், முட்புதர்களும் அதிகம் உள்ளதாகவும், பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் சுற்றி திரிவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.