6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 61 புள்ளி இரண்டு சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவை தேர்தலின் 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
ஹரியானா, பீகார், டெல்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் பாஜகவினருக்கும், சமாஜ்வாதி கட்சியினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
காஷ்மீரின் அனந்தநாக்-ராஜோரி தொகுதியில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களை போலீஸார் பிடித்து வைத்ததாக, முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் இரவு 9 மணி நிலவரப்படி, 61 புள்ளி இரண்டு சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 78 புள்ளி 2 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இறுதி மற்றும் 7-வது கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது.