அக்னிபாத் திட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் காங்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேருக்கு ராணுவத்தில் நிரந்தரப் பதவி கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பாஜக ஆளும் மாநில அரசுகள் அக்னிவீரர்களுக்கு காவல்துறையில் 20 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், மத்திய துணை ராணுவப் படைகளிலும் அக்னி வீரர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.
இடஒதுக்கீடு தவிர, அக்னிவீரர்கள் அரசுப் பணிக்கு முயலும்போது, வயது உள்பட பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.