2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி மீதான நம்பிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ளதால், தென் மாநிலங்களிலும் பாஜக கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறுமெனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தாம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, முன்னெப்போதும் இல்லாத வரவேற்பு கிடைத்ததாகவும், இம்முறை பாஜக வெற்றி பெறாத மாநிலங்களே இருக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வடக்கு-தெற்கு பிரிவினை இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் தெரிவித்தார்.