முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர இந்துத்துவவாதியாக வாழ்ந்தார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நடைபெறும் மக்களவை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கதாகும் என கூறினார்.
பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அதனால் பாஜக மிகப்பெரிய வெற்றியை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.