திருநெல்வேலியில் உள்ள வேந்தான்குளத்தை மீட்டெடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வேந்தான்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ’மிஸ்டர் கிளீன்’ என்ற உருவ பொம்மையை குளத்து நீரில் குளிப்பாட்டி சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.