PT சார்- திரைப்படத்தின் கிளைமாக்ஸை ரிவ்யூ செய்ய வேண்டாம் என நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார்.
மதுரையிலுள்ள, பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் PT சார் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகர் ஆதி பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், Pt sir திரைப்படம் இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்றும், பட ரிவியூவின் போதும், X தளத்தில் பலரும் climax இது தான் என்று சொல்கிறார்கள், முடிந்த வரை சமூக வலைத்தளங்களில் Climax ரிவீல் பண்ண வேண்டாம் என்றும் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார்.