ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.