நடிகர் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் கார்த்திக்கின் 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவரது பிறந்த நாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
முக்கிய நட்சத்திரங்களான ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் பிரேம் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்த நிலையில் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர் என இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தெரிவித்தார்.