டெல்லி விவேக் விஹார் பகுதியிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன.
டெல்லி விவேக் விஹார் பகுதியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் உயிரிழந்தன.
ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.