பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகையாக இந்திய நடிகை அனசுயா செங்குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதைப் பெற்றார்.
இதைத்தொடர்ந்து டெல்லி திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனசுயா செங்குப்தா, கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது பெருமையளிக்கிறது என்றும், அடுத்த 2 நாட்கள் ஓய்வு எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.