மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத 26 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், பிரபல நகைக்க கடையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கணக்கில் வராத 26 கோடி ரூபாய் ரொக்கமும், 90 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளுக்கான ஆவணங்களும் சிக்கியது.