17-வது ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியைக் கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐபில் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கும் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இதனை ஒட்டி, புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ள கூகுள், எந்த அணி சாம்பியன் பட்டம்
வெல்லும் என்பதைப் பார்க்க பலர் ஆர்வமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.