கும்பகோணத்தில் நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
கும்பகோணம் பாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் 17 வயது பெண் குழந்தைக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே, இந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தும்படி மர்ம நபர் ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் சைல்ட் லைன் அமைப்பினர், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தனர்.
விசாரணையில், பெண்ணின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் திருமணம் நடத்த இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மணப்பெண்ணை தஞ்சையில் உள்ள அரசு காப்பகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.