சென்னை அமைந்தகரையில் நாளை காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 19-ம் தேதியே வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ளன.
இந்நிலையில் அமைந்தகரை அய்யாவு மஹாலில் நடைபெறும் கூட்டத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை காலை 9.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில நிர்வாகிகள் அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், வேட்பாளர்கள், நாடாளுமன்ற தொகுதி வாரியாக மையக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இதில் தொகுதிகளின் நிலவரங்கள், செலவு கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன.