ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்ஸி கட்டிடத்திற்குள் நுழைந்த பாம்பு லாவகமாக மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சர்ஜித் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு வழக்கம் போல் ஊழியர்கள் வந்த போது நாக பாம்பு ஒன்று உள்ளே இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பாம்பு பிடி வீரர் யுவராஜிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு வந்த யுவராஜ் ஏழு அடி நீளம் கொண்ட கோதுமை நாக பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விட்டார்.