நாடாளுமன்றத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 7-வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பாஜக தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் எனவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராவார் எனவும் தெரிவித்தார்.
மேலும் காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.