“அரசியலுக்கு வரும் பேச்சுக்கே இடமில்லை” என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி 12-ம் வகுப்பில் 592 மதிப்பெண் பெற்றும், அவருக்கு கல்லூரியில் சீட்டு கிடைக்கவில்லை.
இந்நிலையில், சின்னத்திரை புகழ் அறந்தாங்கி நிஷாவின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார்.
அந்த வகையில், மாணவி வைஷ்ணவிக்கு ஊக்கத் தொகை வழங்கி, தனியார் கல்லூரியில் படிக்க அட்மிஷன் பெற்றுக் கொடுத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ், “மக்களுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு உதவி செய்யப்படும்”, “அரசியலுக்கு வரும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.