தமிழ் ஜனம் தொலைக்காட்சி யூடியூபில் ஒரு லட்சம் சந்தாதாரர்களைக் கடந்ததை ஒட்டி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கான டிஜிட்டல் தளம் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் அனைத்து தரப்புக்கான செய்திகள், வீடியோக்கள் பகிரப்பட்டன.
இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள், தமிழ் ஜனம் தொலைக்காட்சி YouTube-யை பார்த்துள்ளனர். இந்நிலையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஒரு லட்சம் சந்தாதாரர்களைக் கடந்தது.
இதனைக் கொண்டாடும் வகையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்தில், மத்திய அமைச்சர் எல். முருகனுடன் தொலைக்காட்சி ஊழியர்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.