மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நள்ளிரவு ரீமால் புயல் கரையை கடந்தது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ரீமால் புயலாக வலுப்பெற்றது.
இந்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நள்ளிரவு மேற்கு வங்கத்தின் சாகார் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கேப்புபாராவிற்கும் இடையே கரையே கடந்தது. அப்போது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கொல்கத்தா, பர்கானாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
ரீமால் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், கடலோர பகுதிகளில் ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது.
மேலும், பர்கனாஸ் மற்றும் புர்பா மெதினிபுர் மாவட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ரீமால் புயல் கரையை கடந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் புயல் மீட்பு பணிகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சாலையில் முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.