நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்றது.
17-வது ஐபில் சீசனின் இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று மோதின.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஹைதராபாத் அணி, 18 புள்ளி மூன்று ஓவர்களில், 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 10 புள்ளி மூன்று ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு எளிதாக வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.