நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி ஆரஞ்சு cap-ஐ வென்றுள்ளார். 2 முறை ஆரஞ்சு cap-ஐ வென்ற முதல் இந்திய வீரர் பெற்ற என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய நடப்பு ஐபிஎல் தொடர், அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கோலாகலமாக நிறைவு பெற்றது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, 3-வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.
இந்தத் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி 15 போட்டிகளில் 741ரன்கள் குவித்த விராட் கோலி ஆரஞ்சு கேப்-பை வென்றார்.
இதே போல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக வழங்கப்படும் Purple Cap-ஐ பஞ்சாப் வீரர் ஹா்ஷல் படேல் வென்றுள்ளார்.
14 போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். Most Valuable player of the season விருதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் வென்றுள்ளார்.
Emerging Player of the season விருதை சன் ரைசர்ஸ் அணி வீரர் நிதிஷ் குமார் வென்றார்.
இதே போல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு 20 கோடி ரூபாயும், 2-வது இடம் பிடித்த ஹைதராபாத் அணிக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.