திருப்போரூர் அருகே ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள குமிழி பகுதியில் ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த வெள்ளிக்கிழமை முதல் யாகபூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து, பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமான கலசம் மற்றும் அம்மனுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.