மயிலாடுதுறையில் 28 மாநில நடனங்களை 2 மணி நேரமாக ஆடி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
மயிலாடுதுறையில் ‘அபிநயா நாட்டியப்பள்ளி” சார்பில் ‘வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தலைப்பில் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 28 மாநிலங்களை சேர்ந்த நடனங்களை 2 மணி நேரமாக மாணவிகள் ஆடினர்.
பின்னர் பாரத மாத கொடியை ஏந்தி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மாணவிகள் வலியுறுத்தினர். இந்த சாதனையை இன்டர்நேஷனல் பிரைடு வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு அங்கீகரித்தது.