மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் பகுதியிலுள்ள மேலமுத்துமாரியம்மன் கோயிலில் 80-ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது.
திருவிழந்தூர் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அக்னி நட்சத்திர ஆராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோயில் திருவிழாவை ஒட்டி காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் வேப்பிலை சுமந்தும், உடலில் அலகு குத்தியும் நேர்த்திக்கடை செலுத்தினர். இதையடுத்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.