ஈரோடு அருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த நபரிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், இவர், வழக்கம்போல் சின்னியம்பாளையம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, காரில் வந்த 4 பேர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதில் சுரேஷ் கூச்சலிடவே அங்கிருந்த 4 பேரும் தப்பினர்.