மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஞானபுரீசுவரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி காட்சியளிக்கும் இக்கோயிலில் வைகாசி விழாவை ஒட்டி சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் சீர்வரிசை எடுத்துவர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.